எப்பாச்சும் மேகத்தைப் பார்த்திருக்கீங்களா…? வித விதமான வடிவத்தில, அளவுல, அது பாட்டுக்கு சுதந்திரமா, எல்லையில்லாம அதோட இலக்கை நோக்கிப் போய்கிட்டு இருக்கும். அந்த மேகம் மாதிரி என்னோட அறிவுத் தேடலையும், ஆன்மீகத் தேடலையும் வழிப்படுத்திக்க, விரிவாக்கிக்க முயற்சி செய்துட்டே இருக்கேன். அந்த வழில தன்னை உணர்தலுக்காகவும், எண்ண வெளிப்பாட்டுக்காகவுமாக எடுத்த ஒரு கருவி இந்த வலைப்பூத்தளம்.
இதிலே நெறையா சுயநலமும், கொஞ்சம் பொதுநலமும் இருக்கு…:-)
சுயநலம் – அறிவுத் தேடல், ஆன்மீகத் தேடல், தன்னை உணர்தல், எண்ண வெளிப்பாடு
பொதுநலம் – என்னை மாதிரி தேடல்ல இருக்கவுங்களுக்கு(யாராவது இருப்பாங்களா.. சந்தேகந்தான்..) கொஞ்மாவது உதவியா இருக்குமேன்னு…


